search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்ல விசேஷம்"

    • "தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால் அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும்"
    • "ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது"

    சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராசி கண்ணா ஆகியோர் நடித்த ஹாரர் படமான 'அரண்மனை 4' திரைப்படம் கடந்த மே 3 ஆம் தேதி வெளியாகி கமர்ஷியலாக நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வரை வசூலித்துள்ளது.

    இந்த படத்தை சுந்தர் சி மற்றும் அவரது மனைவி குஷ்பு -வின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருந்தது. அரண்மனை 4 திரைப்படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு இன்று (மே 31) தியேட்டர்களில் ரிலீசானது. இந்நிலையில் ரிலீஸ் ஆங்கில செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த குஷ்பு, செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

     

    அப்போது அவர் பேசுகையில், ஹிந்தியில் வெளியான,பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை முக்கிய கதைகளமாகக் கொண்ட 'டார்லிங்ஸ்', 'பதாய் ஹோ', 'கிரியூவ்' போன்ற படங்களை தமிழில் தயாரிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இதுபோன்ற படங்களுக்கு அதிக ரசிகர்கள் இல்லை என்பதால்  அவற்றை தமிழுக்கு கொண்டு வர அதிக காலம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், பெண்களை பிரதானமாக கொண்டு எடுக்கப்படும் படங்களைத் தாண்டி கமர்ஷியலான படங்களையும் தயாரிக்க விரும்புவதாக கூறினார்.

    ஹீரோவுக்காகவே படங்கள் ஓடும் என்ற நிலை மாறி படத்தின் வெற்றிக்கு பெண்களும் முக்கிய பங்கு வகிக்கும் காலம் வந்துவிட்டது. படத்திற்கு கதையே கதாநாயகன் என்ற நிலைக்கு நாம் உயர்ந்துள்ளோம் என்று தெரிவித்தார்.

    ஆலியா பட் நடிப்பில் ஹிந்தியில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான 'டார்லிங்ஸ்' திரைப்படம் பெண்கள் மீது நிகழும் குடும்ப வன்முறையைப் பற்றி பேசியிருந்தது. ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'பதாய் ஹோ', கதாநாயகனின் தாய் கருவுற்றதால் அந்த குடும்பம் சந்திக்கும் சிக்கல்களை பேசிய வித்தியாசமான படமாக அமைந்தது. பதாய் ஹோ படம் தமிழில் ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ் நடிப்பில் வீட்ல விசேஷம் என்ற பெயரில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது.

     

    மேலும் கரீனா கபூர், தபு, கீர்த்தி சனோன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிரியூவ் (Crew) திரைப்படம் விமானப் பணிப்பெண்களின் இன்னல்களை பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள 'வீட்ல விசேஷம்' படத்தின் 'எங்க டாடி செம்ம கேடி' பாடல் வைரலாகி வருகிறது.
    பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பதாய் ஹோ. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

    வீட்ல விசேஷம்
    வீட்ல விசேஷம்

    சில தினங்களுக்கு முன்பு 'வீட்ல விசேஷம்' படத்தின் டிரைலர் ஐபிஎல் பிளே ஆப் போட்டியின் இடையில் வெளியிடப்பட்டு அனைவரின் கவத்தையும் ஈர்த்தது. இப்படம் வருகிற ஜூன் 17ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தின் 'டாடி சாங்' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. கிரிஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி குரலில் வெளிவந்துள்ள இப்பாடல் பலரின் கவனத்தை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


    • ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீட்ல விசேஷம்’.
    • ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    மூக்குத்தி அம்மன் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'வீட்ல விசேஷம்'. இப்படத்தை என்.ஜே. சரவணன் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இணைந்து இயக்கியுள்ளனர். இதில், சத்யராஜ், ஊர்வசி, கே.பி, எஸ்.லலிதா, அபர்ணா பாலமுரளி, யோகி பாபு உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை போனிகபூரின் பே வியூ புரொஜக்ட்ஸ் லிமிடெட், ஜீ ஸ்டுடி யோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர்.

    இப்படம் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இதன் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் 'இது மாதிரி ஃபன்னியா தான் சாங் அனோன்ஸ்மெண்ட் வீடியோலாம் பண்ணுனாரு நம்ம நெல்சன்... டேய் நெல்சா' என்று பதிவிட்டிருந்தனர்.

    அதற்கு பதிலளித்த ஆர்.ஜே. பாலாஜி,'நெல்சன் மிகப்பெரிய இயக்குனர். நான் பல ஷோஸ்களில் அவருடன் பணியாற்றி இருக்கிறேன். அவருடைய படங்களின் தீவிர ரசிகன். எதிர்காலத்தில் அவர் தனது படங்களின் மூலம் நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருவார். தயவு செய்து இப்படி பேசுவதை நிறுத்துங்கள்' என்று பதிவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு ஆதரவு அளித்துள்ளார்.

    ×